உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் துவக்கம்

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் துவக்கம்

கிருஷ்ணகிரி, முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது.கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. கலெக்டர் தினேஷ்குமார் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார். நகர் மன்றத்தலைவர் பரிதா நவாப், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர். விளையாட்டு விடுதி, கால்பந்து பயிற்றுனர் நடராஜ முருகன் நன்றி கூறினார்.கல்லுாரி மற்றும் பொதுப்பிரிவு பெண்களுக்கான தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், வாலிபால், ஹேண்ட்பால், நீச்சல், ஹாக்கி, கபாடி மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடந்தன. போட்டியில், 1,542 மாணவியர், 342 பொதுப்பிரிவு பெண்கள் என மொத்தம், 1,884 பேர் பங்கேற்றனர். போட்டிகள் நேற்று துவங்கி அடுத்த மாதம், 12 வரை, பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என, 5 பிரிவுகளில், 37 விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு, 3,000 ரூபாய், 2ம் பரிசு, 2,000 ரூபாய், 3ம் பரிசு 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தனிநபர் போட்டி களில் முதல் இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள், மாநில அளவிலான போட்டிகளுக்கு, அரசு செலவில் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை