உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., ஒன்றிய செயலாளர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

தி.மு.க., ஒன்றிய செயலாளர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

கிருஷ்ணகிரி: பர்கூர் தொகுதியை சேர்ந்த, தி.மு.க., ஒன்றிய செயலாளராக இருந்தவர் கோவிந்தராசன். இவரது மனைவி கவிதா கோவிந்தராசன், ஒன்றியக்குழு தலைவராக உள்ளார்.நேற்று கோவிந்தராசன், கவிதா கோவிந்தராசன் ஆகியோர் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர்கள் லட்சுமிகுமார், கோவிந்தன், சூர்யா, கண்ணப்பன், சகுந்தலா ரங்கநாதன், லட்சுமி அண்ணாமலை, ராஜேஸ்வரி சோமசுந்தரம், ஐயப்பன் ஆகிய ஒன்றியக்குழு உறுப்பினர்களும், வார்டு உறுப்பினர் நந்தகோபால், கிளைச்செயலாளர் பழனி, ஊத்தங்கரை தொகுதி வெள்ளக்குட்டை பஞ்., தலைவர் சரஸ்வதி விஜயன், ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார் ஆகியோர், தி.மு.க.,வில் இருந்து விலகி, சேலத்தில் இ.பி.எஸ்., முன்னிலையில் தங்களை, அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டனர். இவர்களுடன், தி.மு.க.,வை சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளதாக ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் தெரிவித்தார். அ.தி.மு.க.,வில் இணைந்த கோவிந்தராசன், பர்கூரில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு தன் ஆதரவாளர்களுடன் சென்ற மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, பர்கூர் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ