மேலும் செய்திகள்
நகர தி.மு.க., சார்பில் கருணாநிதி பிறந்த நாள்
04-Jun-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் பிரகாஷ் எம்.பி., பாத்தகோட்டா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன் வரவேற்றார்.மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, சமூக வலைதள பயிற்சியாளர் அன்பகம் இளமாறன் ஆகியோர் பேசுகையில், 'தி.மு.க., சாதனைகள் செயல்திட்டங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது, மற்றவர்களின் பதிவுகளுக்கு பதிலடி கொடுப்பது என ஆன்லைன் செயல்பாடுகளில் முனைப்போடு இருக்க வேண்டும். இளைஞரணி செயலாளர் உதயநிதியின் செயல் திட்டமான இல்லந்தோறும் இளைஞரணி என்ற திட்டத்தை, புதிய நிர்வாகிகள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்' என்றனர்.தொடர்ந்து, சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்வது குறித்தும், வாட்ஸாப், எக்ஸ் தளம், முகநுால் உள்ளிட்டவை மூலம், அரசின் சாதனைகள் கொண்டு செல்வது குறித்து புதிய நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்தனர். மாவட்ட அவைத்ததலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், முன்னாள் எம்.பி., சுகவனம், நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், சரவணன், சத்தியமூர்த்தி, சங்கர், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
04-Jun-2025