உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் ஓட ஓட விரட்டி டிரைவர் வெட்டிக்கொலை

ஓசூரில் ஓட ஓட விரட்டி டிரைவர் வெட்டிக்கொலை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார், 32, டிரைவர்; இவர் நேற்றிரவு, 8:00 மணிக்கு வீட்டின் முன் நின்றிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், அவரை அரிவாளால் வெட்ட முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க, அப்பகுதி சுடுகாட்டு பாதையில் ஓடிய சிவக்குமார் தவறி விழுந்தார். அவரை, பைக்கில் துரத்தி வந்த இருவர், சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியிலேயே சிவக்குமார் உயிரிழந்தார். கடந்தாண்டு ஆக., மாதம் இவரின் தம்பி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவக்குமார் சாட்சியாக இருந்துள்ளார். அதற்கும், அவர் கொலைக்கும் தொடர்பில்லை என, ஓசூர் டவுன் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கு யார் காரணம், கொலையாளிகள் யாரென, இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையான சிவக்குமாருக்கு, நந்தினி என்ற மனைவியும், 7, 6 வயதில் இரு மகன்களும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை