பெண்ணிடம் கைப்பையை ஒப்படைத்த டிரைவர்
ஓசூர்: ஓசூர், ஓம் சாந்தி நகரை சேர்ந்தவர் நீர்லோபர் நிஷா, 27. இவர், கணவர் மற்றும் குழந்தைக-ளுடன் கடந்த, 21ம் தேதி பொருட்கள் வாங்க கடை வீதிக்கு வந்தார். அங்கு ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து கொண்டு, குழந்தையை மருத்துவ-மனையில் சிகிச்சைக்கு டாக்டரிடம் காட்டி விட்டு வீடு திரும்பினார்.அப்போது அவரது கையில் இருந்த கைப்பையை தவற விட்டார். அதில், 3,600 ரூபாய், ஒரு ஏ.டி.எம்., கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, குழந்தையின் மருத்துவ பரிசோ-தனை சீட்டு இருந்தன. ஓசூர் தாலுகா அலுவலக சாலை சந்திப்பிலுள்ள ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக இருக்கும் சுப்-பிரமணி என்பவர் கையில், அந்த கைப்பை கிடைத்தது. அதை யாராவது தேடி வருவார்கள் என, அவர் நினைத்திருந்தார். யாரும் வராததால், அதை திறந்து பார்த்து, அதிலிருந்த ரேஷன் கார்டு மூலம், நீர்லோபர் நிஷா மொபைல் எண்ணை வாங்கி, அவரை தொடர்பு கொண்டு கைப்பையை நேற்று வழங்கினார். இது, மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.