சங்கிலி தொடராக விபத்து டிரைவர் பலி; 3 பேர் காயம்
ஓசூர்:கிருஷ்ணகிரி அடுத்த பி.குருபரப்பள்ளி அம்மன் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 51. டிரைவர்; நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பேரண்டப்பள்ளியிலுள்ள தனியார் கிரஷர் அருகே, டி.வி.எஸ்., ஜூப்பிட்டர் ஸ்கூட்டரில் சென்றார்.அப்போது அவ்வழியாக வந்த லாரி, முன்னால் சென்ற பி.எம்., டபிள்யூ கார் மீது மோதியது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அவ்வழியாக சென்ற கோபாலகிருஷ்ணன் ஸ்கூட்டர் மற்றும் ஹூரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே பலியானார்.மற்றொரு பைக்கில் சென்ற, ஊத்தங்கரை அருகே சாலமரத்துப்பட்டியை சேர்ந்த பூவரசன், 30, அவரது மனைவி மீனா, 29, மற்றும் பி.எம்.,டபிள்யூ காரில் இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை படுகாயமடைந்தனர். ஹட்கோ இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் விசாரிக்கிறார்.