உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் பாக்கியமணி தலைமை வகித்தார். மத்திகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., பூர்ணிமா கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி வளாகத்தில் துவங்கிய பேரணி, மிடுகரப்பள்ளி சாலை, தேன்கனிக்கோட்டை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கல்லுாரியில் நிறைவு பெற்றது.பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர், போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு குழு ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மோகனப்பிரியா, உடற்கல்வி இயக்குனர் மோகன் அந்திரியாஸ், கணினி அறிவியல் துறைத்தலைவர் சரவணன், கவுரவ விரிவுரையாளர் செல்வராணி, ஏழுமலை, மசியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ