கோர்ட்டில் போதையில் தகராறு: டிரைவர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளியை சேர்ந்தவர் ராமகி-ருஷ்ணன், 44, லாரி டிரைவர். நேற்று முன்தினம் காலை, 11:30 மணியளவில் குடிபோதையில், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்-திற்குள் நுழைந்துள்ளார். அங்கு பணியில் இருந்தவர்களிடமும், வந்து செல்வோரிடமும் தகராறில் ஈடுபட்டும், மொபைல் போனில் சத்தமாக பேசியபடியும் நின்றுள்ளார். அங்கு பணியில் இருந்த தபேதார் அவரை தட்டி கேட்டவுடன், அவரையும் ஆபா-சமாக திட்டியுள்ளார். இது குறித்து நீதிமன்ற நிர்வாக அலுவலர் செல்வக்குமார் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.