உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எண்ணேகொள் கால்வாய் திட்டம் நிறைவேற்ற இ.கம்யூ., தீர்மானம்

எண்ணேகொள் கால்வாய் திட்டம் நிறைவேற்ற இ.கம்யூ., தீர்மானம்

கிருஷ்ணகிரி, பர்கூரில், இ.கம்யூ., கட்சியின் வட்டக்குழுக் கூட்டம், வட்டக்குழு உறுப்பினர் பவுன்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கண்ணு, இன்றைய மத்திய, மாநில அரசியல் நிலை குறித்து பேசினார். துணை செயலாளர் பூபேஷ், வேலை அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில், எண்ணேகொள் தடுப்பணையில் இருந்து பெரிய ஏரிக்கு வரும் கால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். கிராம நத்தத்தில் வீடு கட்டி குடியிருப்போருக்கும், விடுபட்ட நிலையில் உள்ளவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ