உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எண்ணேகொள் திட்டத்தை விரைந்து முடிக்க இ.கம்யூ., கட்சி தீர்மானம்

எண்ணேகொள் திட்டத்தை விரைந்து முடிக்க இ.கம்யூ., கட்சி தீர்மானம்

கிருஷ்ணகிரி: பர்கூரில், இ.கம்யூ., கட்சியின் வட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது. வட்ட குழு உறுப்பினர் கமலேஷ் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்-பினர் பழனி, அரசியல் நிலை குறித்தும், மாநில குழு முடிவுகள் குறித்தும் பேசினார். மாவட்ட நிர்-வாக குழு உறுப்பினர் கண்ணு, மாவட்ட குழு முடி-வுகளை விளக்கி பேசினார்.கூட்டத்தில், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கந்தி-குப்பம் மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பட்டா வழங்காமல் இருக்கும் விவசாயிகளுக்கு வீடு மற்றும் நில பட்டா வழங்க வேண்டும். யானை, மயில் உள்ளிட்ட வனவிலங்-குளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மா விவசாயிகளுக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே மா விவசாயிக-ளுக்கு சரியான மருந்து மானிய விலையில் வழங்க வேண்டும். பர்கூர் பகுதியில் இந்த ஆண்டு மழையின்றி பல ஏரிகள் வறண்டுள்ளது. எனவே, எண்ணேகொள் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை