உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரயிலில் சிக்கிய முதியவர் தலை துண்டாகி பலி

ரயிலில் சிக்கிய முதியவர் தலை துண்டாகி பலி

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கெலமங்கலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே, தண்டவாளத்தில் தலை துண்டாகி முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக, சேலம் - யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் இன்ஜின் பைலட் சதீஷ், ஓசூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று காலை தகவல் தெரிவித்தார்.ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரி வினோத்குமார் சிங், ரயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்த போது, ஓசூர் அருகே காரப்பள்ளியை சேர்ந்த ஜனார்த்தனன், 68, என்பதும், நேற்று காலை, 8:00 மணிக்கு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு, தலை துண்டாகி பலியானதும் தெரிந்தது. ஓசூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி