மேலும் செய்திகள்
கேரளாவில் நாய்க்கடியால் 5 வயது சிறுமி பரிதாப பலி
30-Apr-2025
ராயக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே எல்லப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கவுரன். இவரது மனைவி சரோஜா, 60. விவசாயி; கடந்தாண்டு டிசம்பர், 4 காலை, 9:30 மணிக்கு வீட்டின் முன் நின்றிருந்தபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் அவரை கடித்து குதறியது. படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த, 27ல் அவரது உடல்நிலை மோசமாகவே, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார். ரேபீஸ் பாதிப்பு ஏற்பட்டதால், மூதாட்டி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Apr-2025