உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேன் மோதி மூதாட்டி பலி

வேன் மோதி மூதாட்டி பலி

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள், 65. காவேரிப்பட்டணம் அடுத்த பன்னிஹள்ளிபுதுாரை சேர்ந்தவர் துளசி, 52. கூலித்தொழிலாளிகளான இவர்கள், கடந்த, 3ல், சப்பானிப்பட்டி அருகே கிருஷ்ணகிரி-தர்மபுரி சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த பிக்கப்வேன் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பச்சையம்மாள் நேற்று முன்தினம் இறந்தார். படுகாயங்களுடன் துளசி சிகிச்சை பெற்று வருகிறார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ