மேலும் செய்திகள்
தேன்கனிக்கோட்டைக்கு 30 யானைகள் விரட்டியடிப்பு
05-Dec-2024
ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில், பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ள இடம் பெயர்வு யானைகளை, ஒன்றிணைத்து விரட்ட முடி-யாமல், வனத்துறையினர் தவிக்கின்றனர்.கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து வெளியேறிய, 150க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லை-யான ஓசூர் வனக்கோட்டத்தில் முகாமிட்டுள்ளன. இதில் குறிப்-பாக, ஓசூர் வனச்சரகம், சானமாவு காப்புக்காட்டில், 10 யானைகள், ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் வனப்ப-குதியில், 30 யானைகள், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட யானைகள், ஜவளகிரியில், 40 யானைகள் முகாமிட்டுள்ளன.ஊடேதுர்க்கத்தில் உள்ள, 30 யானைகள் தலா, 15 வீதம் இரு குழுக்களாக உள்ளன. அதேபோல், தேன்கனிக்கோட்டை வனப்ப-குதியில், 4 யானைகள் தனித்தனியாகவும், தலா இரு யானைகள் வீதம் மூன்று குழுக்களாகவும், 10 யானைகள் ஒரு குழுவாகவும் முகாமிட்டுள்ளன. அதேபோல், சூளகிரி அருகே சின்னகுத்தி வனப்பகுதியில் ஒற்றை ஆண் யானை உள்ளது.இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், பயிர்களை சேதப்ப-டுத்தி வருகின்றன. குறிப்பாக, ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 15க்கும் மேற்பட்ட யானைகள், கோனே-கானப்பள்ளி கிராமத்தில் புகுந்து தக்காளி, நெல், தென்னை மரங்-களை சேதப்படுத்தின. தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ரகு என்பவரது, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பசுமை குடிலை யானைகள் சேதப்படுத்தின. தொடர்ந்து பயிர்கள் சேதமாகி வருவதால், விவசாயிகள் வேத-னையில் உள்ளனர்.பல்வேறு குழுக்களாக யானைகளால் முகாமிட்டுள்ளதால், அவற்றை ஒன்றிணைத்து விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
05-Dec-2024