உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எல்லம்மா தேவி கோவில் விழா

எல்லம்மா தேவி கோவில் விழா

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் விருப்பாச்சி நகர் பாலகுரு எல்லம்மா தேவி கோவில், 6ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. அதிகாலையில் கணபதி ஹோமம் உட்பட பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பா.ஜ., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நெசவாளர்கள் அணி தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் கோபாலப்பா உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, குபேரன், ரத்தினம்மா மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்