உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக் விபத்தில் விவசாயி சாவு

பைக் விபத்தில் விவசாயி சாவு

கிருஷ்ணகிரி,;தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளத்தை சேர்ந்தவர் சஞ்சய்குமார், 23. கார்கில் பகுதியில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இவர் தன் மாமாவான தர்மபுரி மாவட்டம் ராமன்கொட்டாயை சேர்ந்த விவசாயி சக்திவேல், 31 என்பவருடன் டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில், தாளாப்பள்ளி ஏரிக்கரை அருகே கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலை அருகே சென்றார். அப்போது எதிரே வந்த ஸ்பிளண்டர் பைக்குடன் மோதியது. இதில், சக்திவேல் பலியானார். ராணுவ வீரர் சஞ்சய்குமார் மற்றும் ஸ்பிளண்டர் பைக்கில் வந்த திருப்பதி, 35 ஆகியோரும் காயமடைந்த நிலையில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ