உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊசி போட்ட சிறிது நேரத்தில் விவசாயி சாவு

ஊசி போட்ட சிறிது நேரத்தில் விவசாயி சாவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, நடுப்பட்டி காமராஜர் நகர் பூசாரி தெருவை சேர்ந்தவர் பாபு, 27, விவசாயி. இவரது மனைவி தேவி, 25; தம்பதிக்கு மூன்று வயதில் மகள், ஐந்து மாத ஆண் குழந்தை உள்ளனர். பாபு கடந்த சில மாதங்களாக ஆஸ்துமா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சிங்காரப்பேட்டை அடுத்த எட்டிப்பட்டியில், மெடிக்கல் நடத்தி வரும் மனோஜ், 45 என்பவரிடம், நேற்று மதியம் ஊசி போட்டு விட்டு, பைக்கில் வீட்டுக்கு சென்றார். அங்கு குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் பாபு மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள், சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இறந்து போன பாபுவுக்கு, ஊசி போட்ட மனோஜ், மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர். பாவுவின் சடலத்தை மீட்டு, சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி