மேலும் செய்திகள்
சரக்கு வாகனம் மோதி 3 பேர் படுகாயம்
22-Nov-2025
தேன்கனிக்கோட்டை: யானையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த விவசாயி மீது, சரக்கு வாகனம் மோதியதில் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தாவரக்கரையில் நேற்று முன்தினம் இரவு, மூன்று யானைகள் நுழைந்தன. அவை சாலையை கடந்து செல்வதை பார்க்க, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் இரவு, 8:30 மணிக்கு திரண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆன் செய்த நிலையில் நிறுத்தி, அதன் டிரைவர் யானையை வேடிக்கை பார்க்க சென்றார். வாகனத்திற்குள் இருந்த கிளீனர், யானை வருவதற்குள் வாகனத்தை எடுத்து விட நினைத்து இயக்கியதில், சரக்கு வாகனம் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில், தாவரக்கரையை சேர்ந்த விவசாயி முனிராஜ், 60, பலியானார். கோபாலப்பா, 55, நவீன்குமார், 30, ஆகியோர் படுகாயமடைந்தனர். தப்பியோடிய டிரைவர், கிளீனர் குறித்து தேன் கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Nov-2025