உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நெல் நடவில் விவசாயிகள் ஆர்வம்

நெல் நடவில் விவசாயிகள் ஆர்வம்

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரியிலிருந்து கடந்த ஜூலை, 10-ல் அரசம்பட்டி, பெண்டரஹள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி உள்ளிட்ட, 7 பஞ்.,களுக்கு உட்பட்ட, 2,400 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், 130 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதை பயன்படுத்திக்கொண்ட விவசாயிகள், நெல் நாற்று விட்ட நிலையில், தற்போது பாரூர் ஏரி பாசன பகுதிகளில் நெல் நாற்று நடவு பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்திலுள்ள விவசாய நிலங்கள் பசுமை நிறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை