உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ராகி பயிர்களை குறி வைக்கும் யானைகள் தடுக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

ராகி பயிர்களை குறி வைக்கும் யானைகள் தடுக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

ராகி பயிர்களை குறி வைக்கும் யானைகள்தடுக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்ஓசூர், டிச. 18-ராகி பயிர்களை குறி வைத்து, காலி செய்யும் யானைகளை தடுக்க வழி தெரியாமல், ஓசூர், தேன்கனிக்கோட்டை விவசாயிகள் தவித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், 1.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இதில், 150 கி.மீ., கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையை ஒட்டி வருகிறது. கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவிலிருந்து ஆண்டுதோறும் அக்.,ல் இடம் பெயரும், 150 க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லையான ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் வனச்சரகம் வழியாக, ஆந்திர மாநில வனப்பகுதி வரை சென்று திரும்புகின்றன. 5 மாதம் முகாம்அச்சமயங்களில், ஓசூர் வனக்கோட்டத்தில், ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை வனச்சரகங்களில் ஆண்டுதோறும், 5 மாதங்களுக்கு மேல் யானைகள் முகாமிட்டிருக்கும். அந்த நேரத்தில் பயிர் சேதம், மனித உயிரிழப்புகள் நடக்கின்றன. இதை தடுக்க, சோலார் வேலி, இரும்பு வடவேலி, அகழிகள் போன்றவற்றை வனத்துறையினர் ஏற்படுத்தி உள்ளனர். ஆனால், அதையும் தாண்டி, யானைகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றன. நடப்பாண்டு, 150 க்கும் மேற்பட்ட யானைகள், குட்டிகளுடன் இடம் பெயர்ந்துள்ள நிலையில், பயிர் சேதம் தினமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ராகி தோட்டங்களை யானைகள் அழித்து வருகின்றன. 100 கிராமங்கள்ஓசூர், தேன்கனிக்கோட்டையில், 35,000 ஹெக்டேருக்கு மேல், மானாவாரியாக ராகி சாகுபடி நடக்கிறது. ராகியை பெண் யானைகள் சாப்பிட்டால், குட்டிகளுக்கு கொடுக்க அதிகமாக பால் சுரக்கும். ராகியை ஆண் யானைகளும் விரும்பி உண்ணுகின்றன. அதனால், வனப்பகுதியை ஒட்டிய, நொகனுார், மட்ட மத்திகிரி, சானமாவு உள்ளிட்ட, 100 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து, ராகி பயிரை தின்பதோடு, அதன் கால்களில் சிக்கி பல ஏக்கர் ராகி தோட்டங்கள் நாசமாகின்றன. யானைகளை தடுக்க வழி தெரியாமல் விவசாயிகள் தடுமாறுகின்றனர்.மாற்றுப்பயிருக்கு தயக்கம்வனத்துறையினர் கூறுகையில், 'மாற்று பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளிடம் கூறுகிறோம். ஆனால், விவசாய குடும்பங்களின் பிரதான உணவாக ராகி உள்ளதால், அதை மானாவாரியாக சாகுபடி செய்கின்றனர். மாற்று பயிர் சாகுபடிக்கு தண்ணீர் தேவை என்பதால் தயங்குகின்றனர்' என்றனர்.பட்டாசு, டார்ச் லைட் தேவைவிவசாயிகள் கூறுகையில், 'யானைகள் விவசாய நிலங்களுக்கு வந்தால் தீ பந்தங்களை எரிய விட்டு விரட்ட முயற்சிக்கிறோம். வனத்துறையினர் எங்களுக்கு அதிக ஒளி கொண்ட டார்ச் லைட், பட்டாசு போன்றவற்றை கொடுப்பதில்லை. கொடுத்தால், யானைகளை விரட்ட உதவியாக இருக்கும். கனமழையால் ராகி பயிர்கள் முளைத்து வரும் வேளையில், யானைகளால் பல ஏக்கர் ராகி தோட்டங்கள் நாசமாகின்றன. தக்காளி, சோளம், முட்டைக்கோஸ் போன்ற பயிர்களை விட, ராகியை மட்டுமே யானைகள் குறிவைத்து உண்ணுகின்றன. அதனால், சேதமாகும் பயிர்களுக்கு உடனுக்குடன் இழப்பீடு வழங்க வேண்டும்' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை