உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேளாண் அறிவியல் மையம் சார்பில் புலியூர் கிராமத்தில் வயல் தின விழா

வேளாண் அறிவியல் மையம் சார்பில் புலியூர் கிராமத்தில் வயல் தின விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையம், புதிதாக வெளியிட்ட கோ -- 55 நெல் ரகத்தின் முதன்மை செயல் விளக்க திடல், காவேரிப்பட்டணம் அருகி-லுள்ள புலியூர் கிராமத்தில், 5 விவசாயிகளின் நிலங்களில், அங்-கக வேளாண் முறையில் செயல்படுத்த பட்டுள்ளது. இந்த செயல் விளக்கத்திடலின் வயல் தினவிழா புலியூர் கிராமத்தில் நடந்தது. வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ், அறிவியல் மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், அங்கக முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை யின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் உதயன், நுண்ணுயிர் உரங்களை கொண்டு விதை நேர்த்தி, இலை-வழி இயற்கை வளர்ச்சி ஊக்கி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்-மைகள், நெல் ரகம், 115 நாட்களில் வளரக்கூடிய மத்திய சன்ன ரகமான கோ - 55, ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக, 5.8 டன் விளைச்சல் தரக்கூடியவை என்றும், இதன் சிறப்பு அம்சங்களான நடுத்தர உயரம், அதிகத் துார்கள், சாயாத தன்மை, பூச்சி மற்றும் நோய்க்கு மிதமான எதிர்ப்பு தன்மை இருப்பதாக விளக்கம் அளித்தார். வயல் தினவிழாவில், வேளாண் அறிவியல் மைய வேளாண் விரி-வாக்க தொழில் நுட்ப வல்லுனர் செந்தில்குமார், வேளாண் பொறியியல் திட்ட உதவியாளர் முகமது இஸ்மாயில் மற்றும், 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி