உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக்கில் பறந்த சிறுவர்களுக்கு அபராதம்

பைக்கில் பறந்த சிறுவர்களுக்கு அபராதம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் பைக் ஓட்டிய, 18 சிறுவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பைக்குகளை சிறுவர்கள் ஓட்டுவதால், விபத்துகள் ஏற்படுவதாக நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவின்படி, போக்குவரத்து எஸ்.ஐ., ஜோதி பிரகாஷ், கிருஷ்ணகிரியில் ஓட்டுனர் உரிமம் இன்றி டூவீலர்களை இயக்கிய சிறுவர்களை பிடித்து அறிவுரை வழங்கினார். மேலும் டூவீலரின் உரிமையாளர் மற்றும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மறுமுறை பிடிபட்டால், பெற்றோர் மீது வழக்குபதிந்து கைது செய்யப்படுவர் என போலீசார் கூறினர்.நேற்று பைக்குகளை ஓட்டிய, 18 சிறுவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சிறுவர்களை வாகனங்களை ஓட்ட அனுமதித்தால், பெற்றோர் மீது, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன், வாகனத்தின் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும். பெற்றோருக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என, எஸ்.பி., தங்கதுரை எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ