புல்லட் மோதி பூ வியாபாரி பலி
ஓசூர், கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே மாதநாயக்கன ஹள்ளியை சேர்ந்தவர் திம்மாசெட்டி, 54, பூ வியாபாரி; கடந்த, 30ம் தேதி இரவு, 11:20 மணிக்கு ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மூக்கண்டப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த புல்லட், திம்மாசெட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து, புல்லட்டை ஓட்டி வந்த, கர்நாடகா மாநிலம், பெங்களூரு விஜயபுராவில் வசிக்கும், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே செக்காடியை சேர்ந்த யுவனேஷ், 23, என்பவரை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.