உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / யானைகள் தாக்கி இருவர் பலியான பகுதிகளில் வனத்துறையினர் ஆய்வு

யானைகள் தாக்கி இருவர் பலியான பகுதிகளில் வனத்துறையினர் ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மகராஜகடை, சூளகிரி அருகே யானை தாக்கி, இருவர் பலியாகினர். இதையடுத்து யானைகளின் நடமாட்டம் குறித்து அதிகாரிகள் குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:சென்னை முதன்மை தலைமை வன பாதுகாவலர், மதுரை தலைமை வன பாதுகாலர், கால்நடை மருத்துவர் அடங்கிய குழு, யானைகள் தாக்கி பொதுமக்கள் பலியான இடங்களான, கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட மகராஜகடை காப்புக்காடு, நாரலப்பள்ளி காப்புக்காடு, நாரலப்பள்ளி தொடர்ச்சி காப்புக்காடு பகுதிகளில் பார்வையிட்டனர். மேலும், மேல்பூங்குருத்தி, மகராஜகடை கிராமத்தையொட்டி உள்ள விவசாயிகள் வனக்குழு தலைவர்கள், வனக்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். சானமாவு காப்புக்காடு, மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் கடக்கும் பாதையையும் ஆய்வு செய்தனர்.வன பணியாளர்கள், சீருடை பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், இதர அலுவலர்களுடன் யானைகளின் நடமாட்டம் குறித்த விபரங்களை கேட்டு, கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். மேலும், வனப்பகுதி அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு சென்று, யானைகளின் நடமாட்டம், கால் தடங்கள் குறித்த விபரங்களையும் சேகரித்தனர். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை