வனத்திலிருந்து வெளியேறிய யானைகள் ஜீப்பில் சென்று விரட்டிய வனத்துறையினர்
வனத்திலிருந்து வெளியேறிய யானைகள்ஜீப்பில் சென்று விரட்டிய வனத்துறையினர்ஓசூர், டிச. 8-தேன்கனிக்கோட்டை அருகே, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 3 யானைகளை வனத்துறையினர் ஜீப்பில் சென்று, காப்புக்காட்டிற்குள் விரட்டினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட முள்பிளாட் வனப்பகுதியில், 25க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சமடைந்துள்ளன. அதேபோல், தாவரக்கரை வனப்பகுதியில் கிரி என்ற யானையுடன், மேலும், 2 யானைகளும் இணைந்து சுற்றித்திரிகின்றன. அவற்றை, ஜவளகிரி வனப்பகுதி வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு தாவரக்கரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 3 யானைகளும், தாவரக்கரை கிராமத்திற்கு செல்லும் சாலையில் சுற்றித்திரிந்தன.இதையறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், அங்கு சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஜீப்பில் முன்நோக்கி சென்றவாறு வனத்துறையினர் யானைகளை விரட்டினர். அதிக சத்தம் எழுப்பியதுடன், டார்ச் லைட்டுகளை ஒளிர விட்டனர். அதனால் யானைகள், சாலையில் ஓட்டம் பிடித்து, விவசாய நிலங்கள் வழியாக தாவரக்கரை வனப்பகுதிக்கு சென்றன. நொகனுார், தாவரக்கரை வனப்பகுதியில் மாறி, மாறி முகாமிட்டு வரும் இந்த, 3 யானைகளும், பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி, விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.