உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 30 ஆண்டு போராட்ட திட்டத்தை கெடுக்க சதி முன்னாள் பஞ்., தலைவர்கள் புகார் மனு

30 ஆண்டு போராட்ட திட்டத்தை கெடுக்க சதி முன்னாள் பஞ்., தலைவர்கள் புகார் மனு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, அரசு அறிவித்த துணை சுகாதார நிலையத்தை கட்ட விடாமல் தடுக்க, சதி செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க, தட்ரஹள்ளி பஞ்., முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, ரமேஷ் ஆகியோர் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.இது குறித்து அவர்கள், நிருபர்களிடம் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டம், தட்ரஹள்ளி பஞ்.,ல் உள்ள, 2.50 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க கடந்த, 30 ஆண்டுகளாக போராடினோம். கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகங்களில் மனுக்கள் அளித்தோம். தற்போது அந்த நிலத்தில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில், துணை சுகாதார நிலையம், செவிலியர்கள் குடியிருப்பு கட்ட, அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்கான வரைபடம், திட்ட மதிப்பீடும் தயாராக உள்ளது.இந்நிலையில், அப்பகுதி யில் வசிக்கும் இரு குடும்பத்தினர் மட்டும், நிலத்தை காலி செய்ய மறுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் கிழக்கு மாவட்ட, தி.மு.க., அவைத்தலைவர் நாகராஜ் மீது அவதுாறாக, சமூகவலைதளங்களில் பரப்புகின்றனர். இந்த சுகாதார நிலையம் வந்தால், தட்ரஹள்ளி, தாமோதரஹள்ளி பஞ்.,களோடு, தர்மபுரி மாவட்டம், கும்பாரஹள்ளி கிராம மக்களும் பயன்பெறுவர். மக்களுக்கு கிடைக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த விடாமல், வேறு இடத்தில் அவர்களுக்கு பட்டா வழங்கியும், அதை வாங்காமல், ஜாதிய ரீதியான அவதுாறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுத்து, துணை சுகாதார நிலைய கட்டுமான பணிகளை உடனடியாக துவங்க, கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தோம். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !