உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்

ஓசூர்: கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ் மொழியை செம்மொழியாக்கி, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பாதுகாப்பு அறனாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. தமிழகத்தில், 5 முறை முதல்வராக இருந்து, சாதனைகள் படைத்து மறைந்த அவரது, 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று (ஆக.7) காலை, 9:00 மணிக்கு, மேற்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி, வார்டு, பஞ்., கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆங்காங்கு கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ