உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்-ளியில், வட்டார வள மையம் சார்பில், மாற்றுத்திறன் மாணவர்க-ளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெய்சங்கர், மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் மஞ்சுநாதன் முன்னிலை வகித்தார். இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். இவர்களில், 25 மாணவர்க-ளுக்கு புதிய மாற்றத்திறன் அடையாள அட்டையும், 10 மாணவர்-களுக்கு அட்டை புதுப்பித்தலும், 43 மாணவர்களுக்கு நாற்கா-லியும், வீல் சேரும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட உதவி திட்ட அலுவலர் மகேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், ராஜா ஆகியோர் உபகரணங்களை வழங்கினர். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்று-னர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர், பகல்-நேர பராமரிப்பு அலுவலர்கள், கணக்காளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை