உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 4வது நாளாக எரியும் குப்பை கிடங்கு கிராம மக்களுக்கு சுவாச கோளாறு

4வது நாளாக எரியும் குப்பை கிடங்கு கிராம மக்களுக்கு சுவாச கோளாறு

4வது நாளாக எரியும் குப்பை கிடங்குகிராம மக்களுக்கு சுவாச கோளாறுஓசூர், செப். 29-ஓசூர் மாநகராட்சி குப்பை கிடங்கு நேற்று, 4 வது நாளாக தொடர்ந்து எரிந்ததால், கிராம மக்கள் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 45 வார்டுகளில் தினமும், 125 டன்னுக்கு மேல் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், ஒரு பகுதி குப்பை, தாசரப்பள்ளி தின்னா அருகே கொட்டப்படுகிறது. தற்போது, 10 டன்னுக்கு மேல் குப்பை குவிந்துள்ளன. கடந்த, 25 மாலை, குப்பை கிடங்கு அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றவர்கள் தீ வைத்ததால் தீ விபத்து ஏற்பட்டது. ஓசூர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று, 4வது நாளாக தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து புகை வெளியேறி வருவதால், தாசரப்பள்ளி தின்னா மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் சுவாச கோளாறு, கண் எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகளவு குப்பை உள்ளதால், தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். அருகில் தண்ணீர் இல்லாததால், மாநகராட்சி மூலம் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து தீயணைப்புத்துறைக்கு வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் இருப்பதால், தண்ணீர் அடித்தாலும் அணையாமல் கடும் துர்நாற்றத்துடன் புகை வெளியேறி கொண்டே இருக்கிறது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி