கிரானைட் கடத்தல்; 4 பேர் மீது வழக்கு
ஓசூர்: தேன்கனிக்கோட்டை தாலுகா, சந்தனப்பள்ளி வி.ஏ.ஓ., மாதேஸ்வரன், அப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஆய்வு செய்தார். அப்போது, 45,000 ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கல் மற்றும் 4,000 ரூபாய் மதிப்புள்ள, 2 யூனிட் மண்ணை கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக, வி.ஏ.ஓ., மாதேஸ்வரன் புகார் படி, சந்தனப்பள்ளியை சேர்ந்த அசோக்குமார், சரத், நாகேஷ், முனி நஞ்சப்பா ஆகிய, 4 பேர் மீது, தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.