உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜல்லி, மண் கடத்தல் டிராக்டர், லாரி பறிமுதல்

ஜல்லி, மண் கடத்தல் டிராக்டர், லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, அச்சமங்கலம் வி.ஏ.ஓ., தனகோடி மற்றும் அலுவலர்கள் கந்திகுப்பம் அருகே சத்தலப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக சென்ற டிராக்டரை மடக்கி சோதனையிட்டதில், ஒரு யூனிட் ஜல்லி கற்கள் அச்சமங்கலம் வழியாக சத்தலப்பள்ளிக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து தனகோடி புகார் படி, கந்திகுப்பம் போலீசார், டிராக்டர் டிரைவர் மிட்டப்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ், 45 என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.அதேபோல, கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு துணை தாசில்தார் பாரதி மற்றும் அலுவலர்கள் தளி ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. அதிகாரி பாரதி புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி