உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கார், ஆம்னி பஸ்களில் கடத்திய ரூ.1.37 லட்சம் குட்கா பறிமுதல்

கார், ஆம்னி பஸ்களில் கடத்திய ரூ.1.37 லட்சம் குட்கா பறிமுதல்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நேற்று முன்தினம் இரவு, மத்திகிரி எஸ்.ஐ., கார்த்திகேயன் மற்றும் போலீசார் பூனப்பள்ளி செக்போஸ்டில் வாகன தணிக்கை கொண்டனர்.அவ்வழியாக வந்த ஹூண்டாய் வென்யூ காரை சோதனையிட்டதில், 46,680 ரூபாய் மதிப்புள்ள, 29.4 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 3,120 ரூபாய் மதிப்பிலான கர்நாடகா மாநில மது வகைகள் கடத்த முயன்றது தெரிந்தது.காரை ஓட்டி வந்தவரை விசாரித்ததில், அவர் கர்நாடக மாநிலம், ஆனேக்கல்லை சேர்ந்த மோனிஷ்குமார், 20, என்பதும், கர்நாடகத்திலிருந்து புகையிலை பொருட்கள், மது வகைகளை வாங்கி, மதகொண்டப்பள்ளியில், தன் கடையில் வைத்து விற்க முயன்றதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் அன்றிரவு, ஓசூர் சிப்காட் எஸ்.எஸ்.ஐ., ஆரோக்யராஜ் மற்றும் போலீசார், ஜூஜூவாடி செக்போஸ்ட் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது பெங்களூருவிலிருந்து வேளாங்கண்ணி சென்ற தனியார் ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 52,850 ரூபாய் மதிப்பிலான, 86 கிலோ புகையிலை பொருட்களை கடத்த முயன்றது தெரிந்தது.தொடர்ந்து பின்னால் வந்த, தேவகோட்டை செல்லும் ஆம்னி பஸ்சில், 10,800 ரூபாய் மதிப்புள்ள, 18 கிலோ புகையிலை பொருட்களும், தென்காசி செல்லும் மற்றொரு ஆம்னி பஸ்சில், 49 கிலோ அளவில், 29,760 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களும் கடத்த முயன்றது தெரிந்தது. மூன்று ஆம்னி பஸ்களில் இருந்த, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை