உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மங்கி குல்லா கும்பலால் நிம்மதியிழந்த ஓசூர் மக்கள்

மங்கி குல்லா கும்பலால் நிம்மதியிழந்த ஓசூர் மக்கள்

ஓசூர்: ஓசூரில் மங்கி குல்லா அணிந்த மர்ம கும்பலால் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்தவர் லோகநாதன், 60; கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீதா, 53. திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு லோகநாதன் சென்றார். அதனால், தன் பேத்திகள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களுடன் கீதா துாங்கிக் கொண்டிருந்தார். அன்று இரவு அவரது வீட்டிற்கு வந்த மங்கி குல்லா அணிந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், வீட்டின் இரும்பு கதவை உடைக்க முயன்றனர். கீதா கூச்சலிடவே, அங்கிருந்து கும்பல் தப்பி சென்றது. பின், அரை மணி நேரம் கழித்து, மீண்டும் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கதவை உடைத்தனர். அதிர்ச்சியடைந்த கீதா, தன் மகள்களுக்கு போன் செய்தார். கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், கீதா கழுத்தை நெரித்து, நகை, பணத்தை தருமாறு கேட்டது. அப்போது, எதிர் வீட்டினர் மற்றும் கீதாவின் மருமகன்கள் அங்கு வந்ததால், சத்தம் கேட்டு மர்ம கும்பல் தப்பியது. பேகேப்பள்ளி மற்றும் எழில் நகர் பகுதியில், மங்கி குல்லாவுடன் மர்ம கும்பல் திரிவது அப்பகுதி, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. இது இரு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இரவு ரோந்திற்கு போலீசார் வருவதில்லை. அதனால் இதுபோன்ற கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளதாக, மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, சிப்காட் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை