உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தி.மு.க., பாக முகவர்கள் அறிமுக கூட்டம்

ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தி.மு.க., பாக முகவர்கள் அறிமுக கூட்டம்

ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தி.மு.க., பாக முகவர்கள் அறிமுக கூட்டம்ஓசூர், நவ.7-கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாக முகவர்கள், தொகுதி பார்வையாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. ஓசூர் தொகுதிக்கு மீரா மகால் திருமண மண்டபத்திற்கும், தளி சட்டசபை தொகுதி தேன்கனிக்கோட்டை சப்தகிரி திருமண மண்டபத்திலும், வேப்பனஹள்ளிக்கு, சூளகிரி எஸ்.ஏ.எஸ்., மகாலிலும் நேற்று தனித்தனியாக கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, ஓசூர் தொகுதி பார்வையாளர் வடிவேல், தளி தொகுதி பார்வையாளர் தர்மசீலன், வேப்பனஹள்ளி தொகுதி பார்வையாளர் முருகானந்தம் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.மேலும், அடுத்த மாதம், 5ல் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக துணை முதல்வர் உதய நிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாநகர மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், துணை மேயர் ஆனந்தய்யா, இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் சுகுமார், ஓசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ