மெட்ராஸ் ஐ நோயை கண்டறிவது எப்படி?
மெட்ராஸ் ஐ நோயைகண்டறிவது எப்படி?கண்களை பாதுகாப்பது குறித்து கோபி, கச்சேரி மேடு பகுதியில் செயல்பட்டு வரும் ரிஷிக் ஆர்யா கண் மருத்துவமனை டாக்டர் மாலினி கூறியதாவது:- மழை காலத்தில் மெட்ராஸ் ஐ தொற்று அதிகமாகக் காணப்படும். நெரிசலான இடங்களில் வேகமாக பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து கண்ணீர் மற்றும் வைரஸ் மூலம் பரவும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். கண்களில் உறுத்துதல், நீர்வடிதல் அறிகுறிகளாகும். மருத்துவரின் ஆலோசனைப்படி இதற்கான சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். எந்த வயதிலும் கண் பார்வை குறைபாடு ஏற்படலாம். 40 வயதை கடந்தவர்கள் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எங்களுடைய மருத்துவமனையில் கிட்டப்பார்வை, துாரப்பார்வை, வெள்ளெழுத்து குறைபாடுகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கண்புரை அறுவை சிகிச்சை, கண் நீர் அழுத்த நோய் சிகிச்சை, நீரிழிவு நோயாளிகளுக்கு விழித்திரை பரிசோதனைகளும் நவீன முறையில் செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினார்.--------------------------------------------ரித்தீஷ் மருத்துவமனையில் அதிநவீன டயாலிசிஸ் பிரிவுசத்தியமங்கலம் வி.ஐ.பி., நகர், எஸ்.ஆர்.என்., லைன் கோர்ட்டு ரோடு பகுதியில், ரித்தீஷ் மருத்துவமனை நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இருதயம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் மற்றும் லேப்ராஸ்கோபிக் மருத்துவர் நிர்மலா தேவி உள்ளனர். இங்கு அதி நவீன வசதிகளுடன் டயாலிசிஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது.இங்கு, 50 படுக்கை வசதி உள்ளது. 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு, வெண்டிலேட்டர் வசதியுடன் ஐ.சி.யூ., வசதி, பிரசவ அறை, என்.ஐ.சி.யூ., மாடுலர் அறுவை சிகிச்சை அரங்கு, ஸ்கேன், எக்கோ ஸ்கேன் வசதி என அனைத்தும் உள்ளது.பொது மருத்துவம், இருதயம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோபிக், காது, மூக்கு, தொண்டை துறை, மன நல மருத்துவம், சிறுநீரக கல் அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, விஷ முறிவு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 0429-5-224544 மற்றும் 94421-79699 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.