உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மேம்பால பணிக்கு கொட்டிய ஜல்லியில் மனித எலும்புகள்

மேம்பால பணிக்கு கொட்டிய ஜல்லியில் மனித எலும்புகள்

ஓசூர்:ஓசூரில், மேம்பால பணிக்கு கொட்டிய ஜல்லியில், மனித எலும்பு துண்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஜங்ஷன் பகுதியிலுள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி நடக்கிறது. இதற்காக, ஒன்றரை மாதத்திற்கு முன், தனியார் கிரஷரிலிருந்து ஜல்லி வாங்கப்பட்டது. அதை நேற்று முன்தினம் அள்ளிய போது, மனிதனின் தொடை, கை, விரல் என, மூன்று எலும்புத் துண்டுகள் மற்றும் ஒரு பேன்ட் இருந்தது.ஜூஜூவாடி வி.ஏ.ஓ., பிரபாகரன் புகார்படி, சிப்காட் போலீசார் எலும்புத் துண்டுகளை கைப்பற்றி, ஜல்லி வாங்கிய தனியார் கிரஷரில் விசாரணை நடத்தினர்.கிரஷரில் மொத்தமாக ஜல்லியை கொட்டியபோது, அதற்குள் யாராவது சிக்கி இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு, உடல் பல துண்டுகளாக வெட்டி, ஜல்லியில் வீசப்பட்டதா என, பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ