மேலும் செய்திகள்
ஓட்டல் - பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
19-Nov-2024
பேக்கரி, ஓட்டல், இறைச்சி கடைகளில் ஆய்வுகெட்டு போன உணவு பொருட்கள் பறிமுதல்ஓசூர், டிச. 1-கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், பேக்கரி, பானிபூரி கடைகள், டீக்கடைகள், மளிகை மற்றும் சிக்கன், மட்டன் கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துமாரியப்பன், பிரகாஷ், சந்தோஷ்குமார், அஸ்வினி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் உணவு தயார் செய்து, சப்ளை செய்து வந்த உணவு விடுதியை மூடி, அதன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், சில ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் இருந்து கெட்டுப்போன 6 கிலோ சிக்கன், முட்டைகள், 4 கிலோ காலாவதியான ரொட்டி, கேக், உணவு பொருட்கள், 6 கிலோ அழுகிய காய்கறிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர்.பேக்கரில் பயன்படுத்தப்பட்ட, 56 துருப்பிடித்த இரும்பு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு, 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. கெலமங்கலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் லட்சுமிபதி, சிவகுருநாதன், டவுன் பஞ்., துப்புரவு மேற்பார்வையாளர் நாகேந்திரன் உடனிருந்தனர்.
19-Nov-2024