உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நில உடைமைகளை பதிவேற்ற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

நில உடைமைகளை பதிவேற்ற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

தளி: தளி ஒன்றியம், சாலிவரம் கிராமத்தில், வேளாண் துறையின் அட்மா திட்டம் சார்பில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கி-ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், எள் மற்றும் சூரிய-காந்தி உற்பத்தி மேம்பாட்டு தொழில்நுட்பம் குறித்து விவசாயிக-ளுக்கு பயிற்சி நடந்தது. இதை, மாவட்ட கலெக்டர் தினேஷ்-குமார் துவக்கி வைத்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, வேளாண் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டு அவர் பேசியதாவது: சிறுதானியம் மற்றும் பயறு வகைகளை பயிரிட்டு, விவசாயிகள் மானியங்களை பெறலாம். இதற்கான விதைகள் வேளாண் விரி-வாக்க மையங்களில் கிடைக்கும். விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து, கூடுதல் லாபம் அடையலாம்.பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதியுதவி திட்டத்தில், நில உடைமை மற்றும் இ.கே.ஓய்.சி., பதிவேற்றம், வங்கி கணக்-குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், சம்பந்தப்-பட்ட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது பொது சேவை மையத்தை அணுகி பதிவேற்றம் செய்யலாம். நில உடைமை பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் தாமதிக்காமல் பதி-வேற்றம் செய்து, இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெறலாம். விவசாயிகள் வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நல்ல மகசூல் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சியப்பன், கலெக்-டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணியன், வேளாண் உதவி இயக்குனர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை