| ADDED : நவ 21, 2025 01:38 AM
கிருஷ்ணகிரி வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப ஒப்படைக்க, மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான தினேஷ்குமார் தெரிவித்தார்.கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில், பூர்த்தி செய்த வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் ஆய்வு செய்து, அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல், 'சிறப்பு தீவிர திருத்த பணிகள் -2026' நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த, 4 முதல், வீடு வீடாக கணக்கெடுப்பு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, அவை பூர்த்தி செய்து, திரும்ப பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு பெறப்பட்டு வரும் படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளிலும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் பொதுமக்கள், தங்களது பூர்த்தி செய்த கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.