மேலும் செய்திகள்
15ல் பாகலுார் சாலை பணிகள்மாற்று பாதையில் வாகனங்க
10-Apr-2025
ஓசூர்:தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையில், ஓசூர் மாநகராட்சியில் உள்ள நீர்நிலைகளை ஒருங்கிணைக்கும் வகையில், வடிகால் அமைக்கும் பணிகள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மழைநீர் வடிகால் திட்டம் தொடர்பாக கடந்த, 23ல் நடந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் திட்டம் தொடர்பாக பரிந்துரை செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.இதையடுத்து, ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை ரோடு மேம்பாலம், பழைய நகராட்சி அலுவலகம், கே.சி.சி., நகர் ராஜகால்வாய் ஆகிய பகுதிகளில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, மாநகராட்சி கூட்டரங்கில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்தது. ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா, மாநகராட்சி கமிஷனர் மாரிசெல்வி, செயற்பொறியாளர் விக்டர் ஞானராஜ் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
10-Apr-2025