உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா சைக்கிள் பூட்டும் பணி தீவிரம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா சைக்கிள் பூட்டும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டில், கிருஷ்ணகிரி மாவட்ட மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்குவதற்கான உதிரிபாகங்கள், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தன.இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், 'நடப்பாண்டில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியரில் விலையில்லா சைக்கிள் பெற தகுதியானோர் பட்டியல் பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப் பட்டுள்ளது. தற்போது, 4 லோடுகளாக, 2,880 சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் வந்துள்ளன. அதை பூட்டும் பணியில், 9 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளொன்றுக்கு, 90 சைக்கிள்களை பூட்டி வருகின்றனர். வரும் வாரத்தில் அனைத்து பணிகளும் முடிந்து, சைக்கிள் தயார் நிலையில் இருக்கும். அதன்பிறகு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் படி, பள்ளிகள் வாரியாக சைக்கிள்கள் பிரித்து அனுப்பப்படும்' என்றனர்.அவசர கதியில்இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், 'அவசர கதியில் சைக்கிள்கள் பூட்டப்படுவதால், ஒவ்வொரு முறையும் சைக்கிள் வழங்கும்போது, அதை வெளியில் ஒரு சைக்கிள் கடையில் கொடுத்து சரிபார்த்த பின்தான் பயன்படுத்தும் நிலை உள்ளது. இம்முறையாவது முறையாக உதிரி பாகங்களை சரியான முறையில் பூட்டி சைக்கிள் வழங்க வேண்டும். அதேபோல பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா லேப்டாப் கடந்த, 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. அதையும் அரசு நடப்பாண்டில் வழங்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி