தி.மு.க., பொறியாளர் அணி நிர்வாகிகள் பதவிக்கு நேர்காணல்
ஓசூர்: கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில், மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் பகுதிக்கு, பொறியாளர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல் நாளை (ஆக.26) காலை, 10:00 மணிக்கு, மேற்கு மாவட்ட கட்சி அலுவல-கத்தில், மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமையில் நடக்கிறது. பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் ஞான-சேகரன் முன்னிலை வகிக்கிறார். எனவே, மேற்கு மாவட்டத்-திற்கு உட்பட்ட மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், தங்கள் பகுதியிலிருந்து பொறியாளர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு விண்ணப்பித்தவர்களை தவறாமல் அழைத்து வர வேண்டும். அவர்கள், டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.