உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு 2 வது நாளாக ரசாயன நுரை பெருக்கெடுப்பு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு 2 வது நாளாக ரசாயன நுரை பெருக்கெடுப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 892 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், நேற்று காலை நீர்வரத்து, 426 கன அடியாக குறைந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 600 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அதனால், தென்பெண்ணை ஆற்றில் நேற்று இரண்டாவது நாளாக ரசாயன நுரை பெருக்கெடுத்தது. ஆற்றில் தண்ணீர் ஓடுவது கூட தெரியாத அளவிற்கு ரசாயன நுரை சூழ்ந்திருந்தது. கருப்பு நிறத்தில் தென்பெண்ணை ஆற்றில் கழிவுகளுடன் கூடிய நீர் பெருக்கெடுத்ததால், கடும் துர்நாற்றம் வீசியது. இது விவசாயிகளை வேதனையடைய செய்தது. மேலும், காற்றில் பறந்த ரசாயன நுரைகள், ஆற்றின் கரையில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் மீது படர்ந்ததால், விவசாயிகள் கவலையடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை