உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / .கொல்லப்பள்ளி அருள் முருகன் கோவில் கும்பாபிேஷகம்

.கொல்லப்பள்ளி அருள் முருகன் கோவில் கும்பாபிேஷகம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் பீமாண்டப்பள்ளி பஞ்., கொல்லப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத அருள் முருகன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் காலை, முதல் கால பூஜை, கங்க பூஜை, கணபதி பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், கொடி ஏற்றம் மற்றும் கங்கணம் கட்டுதல் ஆகியவை நடந்தது. மதியம், இரண்டாம் கால பூஜையும், காசி கங்கா தீர்த்தம் கொண்டு வருதல், புற்றுமண் எடுத்தல், கோபுர கலச பிரதிஷ்டை, 108 கலச பூஜையும், இரவு, வள்ளி, தெய்வானை, அருள் முருகன் சுவாமி சிலைகள் தாலாட்டு பாடி உறங்க வைத்தல் நிகழ்வு நடந்தது.நேற்று காலை, 4:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், 9:45 மணிக்கு, அருள் முருகன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேத அருள் முருகன் சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கொல்லப்பள்ளி இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை