உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி மாவட்ட புதிய நிர்வாகிகள் இ.பி.எஸ்.,சை நேரில் சந்தித்து வாழ்த்துq

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய நிர்வாகிகள் இ.பி.எஸ்.,சை நேரில் சந்தித்து வாழ்த்துq

ஓமலுார்: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சார்பு அமைப்புகளுக்கு, நியமனம் செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள், இ.பி.எஸ்.,சை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., பொருளாளராக மல்லையன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலர் சதீஷ்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலராக முன்னாள் எம்.எல்.ஏ.,கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், கிருஷ்ணகிரி நகரம், கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு ஒன்றியம், சூளகிரி கிழக்கு, மேற்கு, மத்திய ஒன்றியம், காவேரிபட்டினம் மேற்கு ஒன்றியம், ஊத்தங்கரை வடக்கு, தெற்கு, மத்திய ஒன்றியம், வேப்பனப்பள்ளி கிழக்கு, மேற்கு ஒன்றியம், கெலமங்கலம் கிழக்கு ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களில், அ.தி.மு.க., சார்பு அணிகளான எம்.ஜிஆர் மன்றம், ஜெ., பேரவை, எம்.ஜி.ஆர்.,இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.புதிய நிர்வாகிகள் அனைவரும், நேற்று கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., அசோக்குமார் தலைமையில், சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அலுவலகத்தில், பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஊத்தங்கரை எம்,எல்.ஏ., தமிழ்ச்செல்வன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணை செயலர்கள் கலைச்செல்வி, மனோரஞ்சிதம், கிருஷ்ணகிரி நகர செயலர் கேசவன், காவேரிப்பட்டினம் ஒன்றிய குழு தலைவர் ரவி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை