உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நில அபகரிப்பு புகாரில் 25 பேர் அதிரடி கைது

நில அபகரிப்பு புகாரில் 25 பேர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 515 நில அபகரிப்பு குறித்த புகார்கள் பெறப்பட்டு 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அபகரிப்பு குறித்து வழக்குகளை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். நில அபகரிப்பு குறித்து விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு டி.எஸ்.பி., தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., இரு ஏட்டுகள், இரு போலீஸார் அடங்கிய தனிப்பிரிவு துவங்கப்பட்டது. 'இந்த வழக்கை விசாரிக்க கரூர், திருவண்ணாமலை, நாகப்பட்டிணம் ஆகிய மூன்று மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தனிநீதிமன்றங்கள் அமைக்கப்படும்' என அரசு அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்.பி., கண்ணன் மேற்பார்வையில் நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி.,யாக மதுரையில் பணியாற்றி வந்த உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். நில அபகரிப்பு பிரிவு செயல்பாட்டுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 27 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் தனி நீதிமன்றம் அமைக்கும் பணியை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜீவரத்தினம் செய்து வருகிறார் கடந்த 15ம் தேதி முதல் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நில அபகரிப்பு தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் இதுவரை 515 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில், 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 3 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. ''நில அபகரிப்பு குறித்து புகார்களை பொதுமக்கள் தனிப்பிரிவில் உரிய ஆவணங்களுடன் புகார் செய்யலாம்,'' என டி.எஸ்.பி., உமா மகேஸ்வரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை