உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேன் கவிழ்ந்து வாலிபர் பலி

வேன் கவிழ்ந்து வாலிபர் பலி

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே, ரோட்டோரத்தில் வேன் கவிழ்ந்ததில் வாலிபர் பலியானார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். காவேரிப்பட்டணம் கோவிந்ததெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், நண்பர்கள் அருண், பூபதி ராஜ்குமார், வினோத்குமார் ஆகியோருடன் வேனில் கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டு காவேரிப்பட்டணம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காவேரிப்பட்டணம் அடுத்த நாட்டான்கொட்டாய் அருகே வந்த போது, வேன் நிலை தடுமாறி, ரோட்டோரத்தில் இருந்த பாறை மீது மோதி கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ