உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை கழிவுநீரை சுத்திகரித்து அனுப்புவதாக நிர்வாகம் தகவல்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை கழிவுநீரை சுத்திகரித்து அனுப்புவதாக நிர்வாகம் தகவல்

கிருஷ்ணகிரி, 'கிருஷ்ணகிரி ஒன்றியம், ராகிமானப்பள்ளி ஏரி, 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரி நீரின் மூலம், 25 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மேலும், அருகிலுள்ள சிக்காரிமேடு பகுதி குடியிருப்புக்கு, இந்த ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். இந்த ஏரியை ஒட்டிய அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, சுத்திகரிக்காமல் ராகிமானப்பள்ளி ஏரியில் விடுவதாக, ராகிமானப்பள்ளி விவசாயிகள், தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.மேலும், சிக்காரிமேடு பகுதி மக்கள் கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் கடந்த மாதம் புகார் மனு அளித்துள்ளனர்.இது குறித்து, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாக அலுவலர் சரவணன் கூறுகையில், ''மருத்துவமனை கட்டியபோதே, 2.60 கோடி ரூபாய் மதிப்பில், இ.டி.பி., எஸ்.டி.பி., என்ற கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அதில், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் சுத்திகரித்து வெளியேற்றப்படுகிறது. நாளொன்றுக்கு, 1.30 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரித்து, 60 சதவீதம் ஏரியில் விடப்படுகிறது. மீதமுள்ள, 40 சதவீத நீர் மருத்துவமனை பூங்காவிற்கு பயன்படுத்தப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை