உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பிணத்தை ஆட்டோவில் ஏற்றி சென்றவர்களிடம் விசாரணை

பிணத்தை ஆட்டோவில் ஏற்றி சென்றவர்களிடம் விசாரணை

ஓசூர் : ஓசூர் அருகே ஆட்டோவில் பிணத்தை ஏற்றி வந்தவர்களை போலீஸார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் அடுத்த கொத்தகொண்டப்பள்ளி டி.வி.எஸ்., சோதனை சாவடி அருகே சுதந்திரதினத்தையொட்டி மத்திகிரி போலீஸார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவை மடக்கி பிடித்து போலீஸார் சோதனை செய்தனர். ஆட்டோவில் இறந்த நிலையில் வாலிபர் பிணத்தை ஏற்றி வந்தது தெரிந்தது. போலீஸார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். இறந்தவர் பெங்களூரு பொம்மண்ட ஹள்ளியை சேர்ந்த மஞ்சு (23) என்பதும், இவர் தேன்கனிக்கோட்டை அடுத்த எஸ்.குருப்பட்டியில் பிரிட்டிங் பிரஸ் கம்பெனியில் வேலைபார்த்து வந்ததும், குடும்பத்தகராறில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பிணத்தை பொம்மண்டஹள்ளிக்கு ஆட்டோவில் கொண்டு சென்றுள்ளனர். மத்திகிரி போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை