| ADDED : ஆக 17, 2011 02:03 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பள்ளி மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில்
சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி வீட்டுவசதி வாரிய
குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் நடந்த விழாவுக்கு, தலைவர்
சக்கரைவேலு தலைமை வகித்தார். செயலாளர் தங்கவேலு முன்னிலை வகித்தார். துணை
செயலாளர் சக்கரபாணி தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர போராட்ட தியாகிகள்
குறித்து பேசினார். சங்க செயற்குழு உறுப்பினர்கள் நித்யானந்தம், கிருஷ்ணன்,
குப்புசாமி, ஸ்ரீராமலு, ஷபீர், ஆறுமுகம், பாஸ்கர், குமார் ஆகியோர்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ராஜகோபால் நன்றி கூறினார். *
சவுட்டஅள்ளி பஞ்சாயத்து ராமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த
விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் தலைமை வகித்தார். பி.டி.ஏ.,
தலைவர் ஜெயபால் தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
இனிப்புகளை வழங்கினார். இதையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கவுன்சிலர் ராஜா, காவேரி, வேலு
மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியை பத்மாவதி நன்றி
கூறினார். * கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த
விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். பி.டி.ஏ.,
தலைவர் வெங்கடாசலம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தமிழாசிரியர் பிரபாகரன்
சுதந்திரம் குறித்து பேசினார். மாணவிகளுக்கு சமசீர் கல்வி புத்தங்கள்
வழங்கப்பட்டன. பள்ளி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ரவிக்குமார் மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் வட்டார காங்கிரஸ் சார்பில்
நடந்த விழாவுக்கு, தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கவுன்சிலர்
முனுசாமி, அப்பு , கண்ணன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.